முகப்பு
தொடக்கம்
3375
கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும்
கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்
உட்பட மற்றும் பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்
இவை உடை மால்வண்ணனை
மலக்கும் நா உடையேற்கு மாறு உளதோ
இம் மண்ணின் மிசையே? (9)