3376மண்மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர்
      பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட
      நூற்றிட்டுப் போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய
      சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கு
      ஆர் பிறர் நாயகரே?             (10)