முகப்பு
தொடக்கம்
3378
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு
தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு
ஆசை இல்லை விடுமினோ
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்
தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க
நின்று நின்று குமுறுமே (1)