3379குமுறும் ஓசை விழவு ஒலித்
      தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு
      ஆசை இன்றி அகற்றினீர்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள்
      தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க
      நெக்கு ஒசிந்து கரையுமே             (2)