3382குழையும் வாள் முகத்து ஏழையைத்
      தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்
      பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு
      அன்று தொட்டும் மையாந்து இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும்
      அத் திசை உற்று நோக்கியே             (5)