3384அன்னைமீர் அணி மா மயில் சிறுமான்
      இவள் நம்மைக் கைவலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள்
      தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்
முன்னம் நோற்ற விதிகொலோ? முகில்
      வண்ணன் மாயம் கொலோ? அவன்
சின்னமும் திருநாமமும் இவள்
      வாயனகள் திருந்தவே             (7)