3386இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள்
      கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை
      மணிவண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தான் உறை
      தொலைவில்லிமங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் ஊர்த்
      திருநாமம் கற்றதன் பின்னையே             (9)