3387பின்னைகொல் நில மா மகள்கொல்
      திருமகள்கொல் பிறந்திட்டாள்?
என்ன மாயம்கொலோ இவள் நெடுமால்
      என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து
      உறையும் தொலைவில்லிமங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த்
      திருநாமம் கேட்பது சிந்தையே.            (10)