3388சிந்தையாலும் சொல்லாலும்
      செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்று அடைந்த
      வண் குருகூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை
      வில்லிமங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்
      அடிமைசெய்வார் திருமாலுக்கே             (11)