3397மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண் சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண் புனை மென்முலை தோற்றது பொற்பே             (9)