3399கட்டு எழில் சோலை நல் வேங்கடவாணனைக்
கட்டு எழில் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே             (11)