342ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச்
சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை
ஆவத்-தனம் என்று அமரர்களும் நன் முனிவரும்
சேவித்திருக்கும் தென் திருமாலிருஞ் சோலையே             (6)