முகப்பு
தொடக்கம்
3448
தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டுத்
திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி
அசுரர் வன் குலம்
வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானே? ஓ (5)