முகப்பு
தொடக்கம்
3449
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும்
செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின் உள்ளாய்
பரமீசனே வந்து என்
கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய் ஒன்று சொல்லாயே (6)