345சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து ஆவத்-தனம் செய் அப்பன் மலை
இந்திர-கோபங்கள் எம்பெருமான் கனி- வாய் ஒப்பான்
சிந்தும் புறவிற் தென் திருமாலிருஞ் சோலையே             (9)