முகப்பு
தொடக்கம்
3451
இன் அமுது எனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும்
மயக்க நீ வைத்த
முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்திக்
கைதொழவே அருள் எனக்கு
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே (8)