3456 | என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா? என்னும் கண்ணீர் மல்க இருக்கும் என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்? என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா தகுவதோ? என்னும் முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்கொலோ முடிகின்றது இவட்கே? (2) |
|