3457 | வட்கு இலள் இறையும் மணிவண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும் உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே என்னும் உள் உருகும் கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள்திறத்து என் செய்திட்டாயே? (3) |
|