3458இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்
      எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்
      கடல்வண்ணா கடியைகாண் என்னும்
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும்
      வந்திடாய் என்று என்றே மயங்கும்
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய்
      இவள்திறத்து என் சிந்தித்தாயே?             (4)