3459 | சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும் வந்திக்கும் ஆங்கே மழைக்கண் நீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும் அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே (5) |
|