3460மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே
      என்னும் மா மாயனே என்னும்
செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ்
      திருவரங்கத்துள்ளாய் என்னும்
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்
      ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்;
பை கொள் பாம்பு அணையாய் இவள்திறத்து அருளாய்
      பாவியேன் செயற்பாலதுவே            (6)