3462கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்று ஏந்தி
      கோ நிரை காத்தவன் என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்
      அஞ்சன வண்ணனே என்னும்
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்
      எங்ஙனே நோக்குகேன்? என்னும்
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்
      என் செய்கேன் என் திருமகட்கே?             (8)