3463என் திருமகள் சேர் மார்வனே என்னும்
      என்னுடை ஆவியே என்னும்
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
      நிலமகள் கேள்வனே என்னும்
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட
      ஆய்மகள் அன்பனே என்னும்
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே
      தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே             (9)