முகப்பு
தொடக்கம்
3464
முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்
மூவுலகு ஆளியே என்னும்
கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும்
நான்முகக் கடவுளே என்னும்
வடிவு உடை வானோர் தலைவனே என்னும்
வண் திருவரங்கனே என்னும்
அடி அடையாதாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே (10)