3465முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
      உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
      வண் குருகூர்ச் சடகோபன்
முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை
      ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
      இருப்பர் பேரின்ப வெள்ளத்தே             (11)