3467நானக் கருங் குழல் தோழிமீர்காள்
      அன்னையர்காள் அயல் சேரியீர்காள்
நான் இத் தனி நெஞ்சம் காக்கமாட்டேன்
      என் வசம் அன்று இது இராப்பகல் போய்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
      தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணிவண்ணன் கண்ணன்
      செங்கனி வாயின் திறத்ததுவே             (2)