3470முனிந்து சகடம் உதைத்து மாயப்
      பேய் முலை உண்டு மருது இடை போய்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
      கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்?
      முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே
      காலம்பெற என்னைக் காட்டுமினே             (5)