3474 | சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள் அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை கார்வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த ஏர் வள ஒண் கழனிப் பழன தென் திருப்பேரெயில் மாநகரே. (9) |
|