3475 | நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள் சிகர மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவரை அன்று மங்க நூற்ற நிகர் இல் முகில்வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே? (10) |
|