3476ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
      செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
      அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
      இவை திருப்பேரெயில் மேய பத்தும்
ஆழி அங்கையனை ஏத்த வல்லார்
      அவர் அடிமைத்திறத்து ஆழியாரே.             (11)