3493கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ
வாட்டம் இலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டம்கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய
கோட்டு அங்கை வாமனன் ஆய் செய்த கூத்துக்கள் கண்டுமே?            (6)