3494கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ
வண்டு உண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்ல
கொண்டு அங்கு தன்னொடும் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே? (7)