3496மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கு ஆய்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே?            (9)