3500என்றுகொல் சேர்வது அந்தோ! அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப்பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண் உயிர்
என்று இவை தாம் முதலா முற்றும் ஆய் நின்ற எந்தாய் ஓ
குன்று எடுத்து ஆ நிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ!             (2)