3501காத்த எம் கூத்தா ஓ! மலை ஏந்திக் கல் மாரி தன்னை
பூத் தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே வந்து என் ஆர் உயிர் நீ ஆனால்
ஏத்து அரும் கீர்த்தியினாய்! உன்னை எங்குத் தலைப்பெய்வனே?            (3)