3503என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கருமாணிக்கமே
உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனேகொல் வந்து எய்துவரே?             (5)