3505என் திருமார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நாமகளை அகம்பால் கொண்ட நான்முகனை
நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பு ஆளியை காணேனோ?             (7)