3507காண்டும்கொலோ நெஞ்சமே! கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரியேற்றினையே?             (9)