3508ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து
ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி
கூற்று இயல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்கு ஆய் கொடும் சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே             (10)