முகப்பு
தொடக்கம்
3512
வாலியது ஓர் கனிகொல்? வினையாட்டியேன் வல்வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழும் துண்டம்கொலோ? அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே (3)