3544ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி? அகல் இடம்
      முற்றவும் ஈர் அடியே
ஆகும்பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன்
      அமர்ந்து உறையும்
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு
      மதிள் திருவாறன்விளை
மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து
      கைதொழக் கூடும்கொலோ?             (2)