3546வாய்க்கும்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து
      ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்
      வயல் சூழ் திருவாறன்விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்
      வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்
      மலர் அடிப்போதுகளே?             (4)