3548ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித்
      தொழுமின் தொண்டீர்!
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை
      அணி நெடும் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப
      உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற அணி திருவாறன்விளை என்னும்
      நீள் நகரம் அதுவே             (6)