3551தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி
      தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த
      தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில்
      திருவாறன்விளை அதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்?
      என்னும் என் சிந்தனையே (9)