3552சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை
      தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன
      மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர்
      குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை
      தீர்த்தனுக்கு அற்ற பின்னே             (10)