3576அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்
சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே             (1)