3579ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா உரு ஆகி
ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வது ஓர் கார் இருள் ஊழி ஒத்து உளதால் உன்
கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கே             (4)