3581பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம்
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்
தணியா வெம் நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல
மணி ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே             (6)