3583என்றே என்னை உன் ஏர் ஆர் கோலத் திருந்து அடிக்கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான்?
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு ஏழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே             (8)