3586உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை
வரை ஆர் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்
உரை ஏய் சொல்தொடை ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
நிரையே வல்லார் நீடு உலகத்துப் பிறவாரே             (11)